Canada

கனடாவில் குளிர்காலம் தொடர்பில் வெளியாகியுள்ள எதிர்வுகூறல்

 

 

கனடாவில் எதிர்வரும் குளிர்காலம் தொடர்பில் அந்நாட்டு வானிலை பற்றிய கால அளவிலான எதிர்வுகூறல்களை வெளியிடும் Farmers’ Almanac என்ற நிறுவனம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

குளிர்காலமானது வரலாறு காணாத அளவில் மிக்க் குறைந்தளவான வெப்பநிலையை பதிவு செய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் பதிவாகும் மிக மோசமான குளிர்காலமாக இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் மறை 40 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை வீழ்ச்சியடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கியூபெக் மற்றும் ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனி மழை மற்றும் பனிப்புயல் போன்ற காலநிலை மாற்றங்களையும் எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top