News

கொழும்பில் பாரிய போராட்டம்! அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

 

 

கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களிடம் இந்த விடயத்தை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது.

பொது மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு கோரி போராட்டங்களை முன்னெடுத்த செயற்பாட்டாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பல்கலைக்கழகங்களில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்த உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் போராட்டம் நாளைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ளதாகவும்  ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top