News

8 ஆண்டுகளுக்கு முன் காணாமற்போன 43 மாணவர்கள்; தகவலை வெளிச்சமிட்ட செய்தியாளர் கொலை

 

 

மெக்சிகோவில் செய்தியாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃப்ரெடிட் ரோமன் (Fredid Roman) 8 ஆண்டுகளுக்கு முன் காணாமற்போன 43 மாணவர்களைப் பற்றிய சில தகவல்களைப் பல சமூக ஊடகப் பக்கங்களிலும் உள்ளூர்ச் செய்தித்தாளிலும் வெளியிட்டார்.

அதையடுத்து, அவர் குவேரேரோ (Guerrero) மாநிலத்தின் சில்பான்சிங்கோ (Chilpancingo) நகரில் இருந்த அவரது காரில்  உயிரிழந்து காணப்பட்டார்.

 

கடந்த 2014ஆம் ஆண்டில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த 43 மாணவர்கள் ஓர் ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது காணாமற்போயிருந்தனர்.

மாணவர்கள் காணாமல்போன சம்பவம் மெக்சிகோவின் ஆக மோசமான மனித உரிமைப் பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் சென்ற வாரம், அந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து பல அமைப்புகளின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாநிலக் குற்றமாக அது வகைப்படுத்தப்பட்டது.

 

 

அந்த சம்பவம் தொடர்பில் , இறப்பதற்குச் சில மணிநேரம் முன்னதாக ரோமன் அவரது Facebook பக்கத்தில் “State Crime Without Charging the Boss” என்ற தலைப்பில் மிக விரிவான பதிவை வெளியிட்டார்.

அதில் அவர், மாணவர்கள் காணாமற்போன வேளையில் 4 அதிகாரிகளிடையே ஒரு சந்திப்பு இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும் மாணவர்கள் காணாமல் போனமை தொடர்பில் ரோமன் அவர் வெளியிட்ட தகவல்களால் கொல்லப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என கூறப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top