News

அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டவருக்கு ரஷிய குடியுரிமை: புதினின் உத்தரவால் கொதித்தெழுந்த அமெரிக்கா

 

அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கணிணி பொறியாளருக்கு ரஷிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.

அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ.வில் பணியாற்றிய எட்வர்டு ஸ்னோடென், கடந்த 2013 ஆம் ஆண்டு அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. இதனால்,, அவர் பல ஆண்டுகளாக ரஷியாவில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் எட்வர்டு ஸ்னோடென்னுக்கு ரஷியாவில் தங்க நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கான உத்தரவில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

ரஷியாவின் இந்த செயல் அமெரிக்காவின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top