News

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி தேர்வு!

 

தீவிர வலதுசாரி பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சியின் தலைவரான ஜோர்ஜியா மெலோனி, இத்தாலியின் முதல் பெண் பிரதமராக தேர்வாகியுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியின் வலதுசாரி அரசாங்கத்தை மெலோனி அமைப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 26 சதவீத வாக்குகளுடன் பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சி, மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக ஒரு கணிப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ரோமில் உள்ள தனது கட்சியின் தேர்தல் இரவு பிரச்சார மையத்தில் மெலோனி உரையாற்றினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், ‘இத்தாலியின் பிரதர்ஸ் தலைமையிலான வலதுசாரி அரசாங்கத்திற்கு ஆதரவாக இத்தாலியர்கள் தெளிவான செய்தியை அனுப்பியுள்ளனர்.

அனைத்து இத்தாலியர்களுக்காகவும், மக்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன், இத்தாலியர்கள் என்று பெருமைப்பட வைப்போம். நீங்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தீர்கள், நாங்கள் உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்’ என கூறினார்.

அதன் கூட்டணிக் கூட்டாளிகளான கடும்போக்குவாதியான மேட்டியோ சால்வினியின் லீக் மற்றும் சில்வியோ பெர்லுஸ்கோனியின் ஃபார்வர்ட் இத்தாலி முறையே 8.7 சதவீதம் மற்றும் 8.2 சதவீதம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெலோனியின் வலதுசாரி கூட்டணியில், மேட்டியோ சால்வினியின் தீவிர வலதுசாரி லீக் மற்றும் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் மைய-வலது ஃபோர்ஸா இத்தாலியா ஆகியவை அடங்கும். இப்போது செனட் மற்றும் சேம்பர் ஆஃப் டெபியூடீஸ் இரண்டையும் கட்டுப்படுத்துகிறது செனட்டில் 42.2 சதவீத வாக்குகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் பாசிஸ்டுகளால் எழுந்த போருக்குப் பிந்தைய இயக்கத்தில் வேரூன்றிய ஒரு கட்சியை அவர் வழிநடத்துகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இத்தாலி இருப்பதால் இது ஐரோப்பாவின் பெரும்பகுதிக்கு மிகப்பெரும் மாற்றத்துக்கான செய்தியை தெளிவுபடுத்துகின்றது..

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top