News

இராணுவ சீருடையில் ஹரி, வில்லியம்; ராணிக்கு இறுதி மரியாதையை செலுத்திய 8 பேரக்குழந்தைகள்!

 

மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் எட்டு பேரக்குழந்திகளான வேல்ஸ் இளவரசர் வில்லியம், ராணுவ சீருடையில் இருந்த இளவரசர் ஹரி, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜெனி, ஜாரா டிண்டால் மற்றும் பீட்டர் பிலிப்ஸ், லேடி லூயிஸ் வின்ட்சர் மற்றும் ஜேம்ஸ், விஸ்கவுண்ட் செவர்ன் ஆகியோர் அரசகுடும்ப முறைப்படி சவப்பெட்டியை சுற்றி நின்று தங்கள் பாட்டிக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

 

 

அவர்கள் மாலை 6 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு வந்த அவர்கள் 6.03 மணியளவில் தொடங்கி சுமார் 15 நிமிடங்கள் அசையாமல் தலை குனிந்த நிலையில் நின்று தங்கள் இறுதி மரியாதையை செலுத்திவிட்டு சென்றனர். இது அரசக்குடும்பத்தின் முறைப்படி, சவப்பெட்டியை சுற்றி மௌனமாக காவலுக்கு (Vigil) நிற்கும் ஒரு நடைமுறையாகும்.

சகோதரர்கள் வில்லியம் மற்றும் ஹரி இருவரும் தங்கள் இராணுவ சீருடை அணிந்திருந்தனர். மற்றவர்கள் கருப்பு உடைகளில் வந்திருந்தனர்.

 

இளவரசர் ஹரி, வேலை செய்யும் அரச பொறுப்பில் இல்லை என்பதால், அவர் துக்கம் அனுசரிக்கும் போது தனது இராணுவ சீருடையை அணிவதற்கான வாய்ப்பு முன்பு மறுக்கப்பட்டது.

 

 

ஆனால், மன்னர் மூன்றாம் சார்லஸ் மகாராணிக்கு இறுதிமறியதை செய்ய வேண்டிய காரணத்திற்ககா தனது இளைய மகனும் இராணுவ சீருடை அணியலாம் என்று முடிவு செய்ததாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

 

 

வெள்ளிக்கிழமை இரவு, மறைந்த ராணியின் பிள்ளைகளான மன்னர் சார்லஸ் மற்றும் அவரது உடன்பிறப்புகள், இளவரசி அன்னே மற்றும் இளவரசர்கள் ஆண்ட்ரூ மற்றும் எட்வர்ட் ஆகியோர் தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top