பொருளாதார நெருக்கடியிலுள்ள இலங்கைக்கு மேலும் 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.
USAID திட்டத்தின் ஊடாக ஐந்தாண்டு காலப்பகுதியில் இந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
அமெரிக்கா உதவி
இலங்கைக்கு பெருந்தொகை டொலர்களை உதவியாக வழங்கும் அமெரிக்கா | Sri Lanka Economic Crisis2022 America Help
ஒரு நிலையான மற்றும் வளமான இலங்கையை முன்னேற்றுவதற்கும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்படுதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த USAID எனும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் பிரதானி சமந்தா பவர் விவசாயத்துறை நலன்கருதி 60 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.
அந்தத் தொகைக்கு மேலதிகமாக மேலும் 65 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.