ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததால் போலீசார் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
ஹிஜாப் சரியாக அணியாததால் போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மாஷா அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவத்தொடங்கியது.
ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தங்கள் தலைமுடியை வெட்டியும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதேவேளை, போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார், பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டம் நடத்திய 700-க்கும் மேற்பட்டுள்ளோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும், இதில் 60 பேர் பெண்கள் என்றும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது..