News

உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உத்தியோகபூர்வமாக இன்று ரஷ்யாவுடன் இணைப்பு!

 

ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்கள், உத்தியோகபூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

புனித ஜோர்ஜ் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில், லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஸபோரிஸியா பகுதிகளில் தற்போது ஆட்சி செலுத்தி வரும் நிர்வாகத் தலைவர்கள், ரஷ்யாவுடன் அந்தப் பகுதிகளை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவார்கள்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிராந்திய நிர்வாகத் தலைவர்கள் மாஸ்கோ வந்துள்ள நிலையில் இவ் இணைப்பு விழாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் கலந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சர்ச்சைக்குரிய பொதுவாக்கெடுப்பு ஜோடிக்கப்பட்டது என கூறியுள்ள மேற்கத்திய நாடுகள், பொதுவாக்கெடுப்பின் முடிவுகளை அங்கீகரிக்க முடியாது என கூறியுள்ளன.

பொதுவாக்கெடுப்பில் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து 97 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top