News

உலகின் முதல் ‘பறக்கும் பைக்’ – அமெரிக்காவில் அறிமுகம்

 

ஜப்பானைச் சேர்ந்த ஏர்வின்ஸ் நிறுவனம் இந்த பறக்கும் பைக்கை உருவாக்கி உள்ளது.

வாகன போக்குவரத்து சார்ந்த தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய வளர்ச்சிகளைக் கண்டு வருகின்றன.

எரிபொருள் தேவையை மிச்சப்படுத்தும் வகையில் சூரிய சக்தி, மின்சக்தியில் ஓடும் வாகனங்கள், விபத்துக்களை தடுக்கும் வகையில் அதிநவீன சென்சார்கள், கேரமாக்களை கொண்ட தானியங்கி வாகனங்கள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது எதிர்கால தொழில்நுட்பமாக உலகின் முதல் ‘பறக்கும் பைக்’ என்ற அசத்தலான வாகனம் அறிமுகமாகியுள்ளது. டெட்ராய்டில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் இந்த பறக்கும் பைக் காட்சிப்படுத்தப்பட்டது.

ஜப்பானைச் சேர்ந்த ஏர்வின்ஸ் நிறுவனம் இந்த பறக்கும் பைக்கை உருவாக்கி உள்ளது. இந்த பைக், தொடர்ந்து 40 நிமிடங்கள் பறக்கும் திறன் கொண்டது என்றும், இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 6 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top