News

ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய தடை! 58 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் பேரவை அதிரடி

போர்க் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள 58 இராணுவ அதிகாரிகளை தண்டிக்கும் சர்வதேச பொறிமுறையை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி வன்னி நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத் தளபதிகள் ஐரோப்பாவில் உள்ள 26 நாடுகள் உட்பட மேற்குலக நாடுகளுக்கு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைமீறி குறித்த 58 இராணுவ அதிகாரிகளும் 26 நாடுகள் உட்பட மேற்குலக  நாடுகளுக்குச் சென்றால் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத் தளபதிகள்

இந்த இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் சர்வதேச சட்டம் பொருந்தும் 100 நாடுகளுக்கு மனித உரிமைகள் பேரவையால் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை கொல்லும் நடவடிக்கையை முன்னெடுத்த இராணுவ அதிகாரி ஒருவரின் பெயரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச பொறிமுறையானது விசாரணைகள் மற்றும் ஆதரங்கள் இன்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இராணுவப் பணியாளர்கள் 58 பேருக்கு தண்டனை வழங்குவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top