Canada

கனடா பயணம் செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு சகல கோவிட் எல்லைக் கட்டுப்பாடுகளையும்  அரசாங்கம் தளர்த்துகின்றது.

 

கனடாவிற்கு பயணம் செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று பரவுகை காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த சகல கோவிட் எல்லைக் கட்டுப்பாடுகளையும் கனேடிய அரசாங்கம் தளர்த்துகின்றது.

எதிர்வரும் சனிக்கிழமையுடன் இந்தக் கட்டுப்பாடுகள் முழு அளவில் தளர்த்தப்படுவதாக அதிகாரபூர்வமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி கட்டாய தடுப்பூசி சான்றிதழ், பரிசோதனைகள், தனிமைப்படுத்தல்கள் என்ற நடைமுறைகள் இனி அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் மற்றும் ரயில்களில் முகக் கவசங்கள் அணிந்து பயணம் செய்யும் நடைமுறையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் எல்லை கட்டுப்பாடு நடைமுறைகளை மீளவும் நீடிப்பதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, வெளிநாட்டுப் பிரஜைகள் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களை கனடாவிற்கள் பிரவேசிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கனடா செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகள் இனி வரும் காலங்களில் எழுமாறான அடிப்படையில் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத கனேடியர்கள் நாடு திரும்பும் போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் சனிக்கிழமைக்கு முன்னதாக கனடாவிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் தற்பொழுது நடைமுறையில் உள்ள கோவிட் கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்கு உட்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top