கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பொருளாதாரக் கொள்கைகள் பொறுப்பற்றவை என பிரதான எதிர்க்கட்சியாக கன்சர்வேடிவ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பியர் பொய்லிவ்ரே ( Pierre Poilievre) விமர்சித்துள்ளார்.
ட்ரூடோவின் பொறுப்பற்ற பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக பணவீக்கம் மோசமாக அதிகரித்துள்ளது. மக்கள் வாங்கும் சக்தியை இழந்து வருகின்றனர் என அவர் கூறினார். 43 வயதான பியர் பொய்லிவ்ரே தனது கட்சியின் 68% வாக்குகளைப் பெற்று கடந்த சனிக்கிழமை கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டார். 2005 முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ஆறாவது தலைவராக இவர் தெரிவாகியுள்ளார். அதேவேளை, 2005 முதல் மூன்று தேர்தல்களில் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியிடம் கன்சர்வேடிவ்கள் தோல்வியடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பொய்லிவ்ரோவுக்கு முன்னதாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக இருந்த ரின் ஓ டூல் (Erin O’Toole) ட்ரூடோவிடம் தோல்வியடைந்ததை அடுத்து கட்சித் தலைமைப் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். கனடாவில் 2025 வரை ஒரு புதிய தேசிய தேர்தல் எதிர்பார்க்கப்படாவிட்டாலும், கருத்துக்கணிப்பாளர்கள் பியர் பொய்லிவ்ரே தலைமையிலான கன்சர்வேடிவ்களை லிபரல் கட்சிக்கான ஒரு வலிமையான மாற்றாகக் கருதுகின்றனர்.
ஏழு ஆண்டுகள் பதவியில் இருக்கும் ட்ரூடோ நான்காவது முறையாக போட்டியிட்டால் அவருக்கு கடும் போட்டியாக பியர் பொய்லிவ்ரே இருப்பார் எனவும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பொருளாதாரக் கொள்கைகள் பொறுப்பற்றவை என பிரதான எதிர்க்கட்சியாக கன்சர்வேடிவ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பியர் பொய்லிவ்ரே விமர்சித்துள்ளார். பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வழியாக பிட்கொய்ன் ( Bitcoin) உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளையும் (cryptocurrencies) அவர் ஊக்குவித்ததாகவும் பியர் பொய்லிவ்ரே குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் நேற்று நியூ பிரன்சுவிக் சென் ஆண்ட்ரூஸில் இடம்பெற்ற லிபரல் கூட்டத்தில் பேசிய பிரதமர் ட்ரூடோ, க்ரிப்டோகரன்ஸிகள் குறித்த பொய்லிவ்ரேவின் நிலைப்பாட்டை கேலி செய்தார்.
உலகளாகிய நெருக்கடி காரணமாக பெரும்பாலான நாடகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்ட ட்ரூடோ, ஏனைய நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடுகையில் கனடா பொருளாதாரம் மோசமடையவில்லை எனவும் கூறினார்.