News

கொழும்பில் திடீரென தீப்பந்தத்துடன் வெடித்த ஆர்ப்பாட்டம்!

 

நாட்டின் சமீபகாலமாக அதிகரிக்கப்படும் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (30-09-2022) மாலை இடம்பெற்றுள்ளது.

பொருட்களின் விலையை குறை, எரிபொருட்களின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மானும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top