News

சீனா பயங்கர தீ விபத்து- கொழுந்துவிட்டு எரியும் 42 மாடி கட்டிடம்

 

சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு தளத்தில் பற்றிய தீ, மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. கட்டிடத்தில் இருந்தவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.

தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏராளமான வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்ததால் தீயணைப்பு வீரர்களால் கட்டிடத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

715 அடி உயரம் உள்ள அந்த கட்டிடம் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்தில் காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சைனா டெலிகாம் அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top