மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அவரது கணவர் பிலிப்பிற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அரச குடும்பத்தினர் அவருக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர். ராணியின் இறுதிச் சடங்கில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
அவர் வெளியிட்ட உருக்கமான பதிவில், ‘மாட்சிமை ராணி இரண்டாம் எலிசபெத்தை நாங்கள் மிகவும் இழக்க நேரிடும், ஆனால் அவர் அமைத்த முன்மாதிரி எப்போதும் நம்மை வழி நடத்தும். மேலும் அவரது சேவைக்கான பக்தி வாழ்நாள் முழுவதும் உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்குவிக்கும்’ என தெரிவித்துள்ளார்.
ராணியின் இறுதிச் சடங்கு உலகெங்கும் உள்ள மக்கள் பார்த்ததன் மூலம் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.