News

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இடும் வேலைத்திட்டம் ஆரம்பம்

 

காங்கேசன்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இடும் வேலைத்திட்டமானது நேற்று(17) திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் இணைந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்கக் கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டம் திருகோணமலை சிவன்கோயிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கையெழுத்து இடும் செயற்பாடானது நேற்றையதினம் திருகோணமலை மாவட்டம் பூராகவும் முன்னெடுக்கப்படும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் சுகீர்தன் தெரிவித்துள்ளார்.

 

 

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் எஸ்.குகதாஸன், மாவட்ட கிளையின் பொருளாளர் வீ.சுரேஸ்குமார் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top