வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு ரூ 10 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் வரலாறு காணாத மழையால் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்நாட்டின் மூன்றில் ஒரு பங்கு பகுதி வெள்ளத்தில் மிதந்தது. இதனால், ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டது
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த பாகிஸ்தானுக்கு வெள்ள பாதிப்பு மேலும் நெருக்கடியை கொடுத்து விட்டு சென்றது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் மறுகட்டமைப்பு மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உதவும் வகையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று உலக வங்கி அறிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்று இருந்த உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான தலைவர் மார்டின் ரைசர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.