News

பாகிஸ்தான் கனமழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1,545 ஆக உயா்வு

 

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,545 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பானது இதுவரை இல்லாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கனமழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 16 சிறுவர்கள், 7 பெண்கள் உள்பட 37 பேர் பலியாகினர்.

இதை தொடர்ந்து அங்கு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை கனமழை, வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,545 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே மழை, வெள்ளத்தால் பாகிஸ்தானில் 1 கோடியே 60 லட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.


Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top