பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர பகுதியான லாகூர்நெவ் இல் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான இரண்டு ஈழத்தமிழ் இளைஞர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
இடம்பெற்ற இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவங்களின் தொடர்ச்சியாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று வியாழன் அதிகாலையில் இடம்பெற்ற இந்தச் சம்பத்தில் இரண்டு வாகனங்களில் வந்த ஆறுபேர் கொண்ட குழுவொன்று நடத்திய தாக்குதலில் 22 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
இரண்டாவது நபர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்செலின் பெர்தெலோட், எனப்படும் வீதியில் இடம்பெற்ற சம்பத்தில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஏராளமான கத்திக்குத்து காயங்கள் மற்றும் வாள்வெட்டுக்கு இலக்கானதாக கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் உடல் முழுவதும் பதினைந்து அல்லது இருபது குத்து காயங்கள் இருந்ததாக அவசரகால முதலுதவி அணித்தரப்பு குறிப்பிட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியில் ஒருவர் மரணமடைந்துள்ளர்.
இந்தப் படுகொலை மற்றும் படுகொலை முயற்சி குறித்த விசாரணைகளை பாரிஸ் குற்றவியல் காவற்துறை மேற்கொண்டு வருகிறது.