Canada

மிஸ்ஸிசாகுவாவில் பிரபல வர்த்தக நிலையத்தில் பெண் மீது கத்தி குத்து தாக்குதல்

 

 

மிஸ்ஸிசாகுவாவில் மிகப் பிரபலமான வர்த்தக நிலையமொன்றில் பெண் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்

மிஸ்ஸிசாகுவாவில் அமைந்துள்ள கனேடியன் டயர் ஸ்டோர் (Canadian Tire store) பிரபல  நிறுவனத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மாவிஸ் மற்றும் பிரிட்டானியா வீதிகளுக்கு அருகாமையில் இந்த டயர் விற்பனை நிலையம் அமைந்துள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்கான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆண் ஒருவரை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த இரண்டு தரப்பிற்கு இடையிலான தொடர்பு குறித்து பொலிஸார் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் தனிப்பட்ட முரண்பாடு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு கிடையாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top