News

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

 

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆவது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் தீலிபன் உயிர்நீத்த 10.48 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், பொதுச் சுடரும் ஏற்றப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top