ரஷியாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ள போதிலும் ஒரு சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ரஷியாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இந்த நிலையில் ரஷியாவில் நேற்று ஒரே நாளில் 36 ஆயிரத்து 605 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு மொத்த பாதிப்பு 2 கோடியே 8 லட்சத்து 69 ஆயிரத்தை கடந்துள்ளது.
அதேபோல் நேற்று அங்கு கொரோனா தொற்றால் 101 பேர் உயிரிழந்தனர்.