உக்ரைனுக்கு எதிராக போரிட படைகளை திரட்ட புதின் உத்தரவிட்ட நிலையில், ராணுவ ஆட்சேர்ப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.
உக்ரைன் மீது படையெடுக்க ரஷியாவில் படைகளை அணி திரட்ட அந்நாட்டு அதிபர் புதினின் உத்தரவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் 730 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக போரிட படைகளை திரட்ட புதின் உத்தரவிட்ட நிலையில், ராணுவ ஆட்சேர்ப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.
போரில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்று கூறி ஏராளமான ரஷியர்கள் வெளிநாடு தப்பிச் செல்லும் நிலையில், ஆங்காங்கே படை திரட்டலுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
அந்த வகையில், 32 நகரங்களில் புதினுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தீவிரம் அடைந்த நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்திய 730க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.