ரஷியாவுக்கு நாங்கள் அணு ஆயுதங்களை வழங்கவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
ரஷியாவுக்கு நாங்கள் அணு ஆயுதங்களை வழங்கவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வடகொரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறுகையில், “நாங்கள் ஒருபோதும் ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களையோ, வெடி மருந்துகளையோ ஏற்றுமதி செய்யவில்லை. அணு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான திட்டமும் எங்களிடம் இல்லை.
அமெரிக்கா வதந்திகளைப் பரப்புகிறது” என்று தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று நாட்டு மக்களுக்கு ரஷிய அதிபர் புதின் உரை நிகழ்த்தினார். அதில், ரஷியாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் அணு ஆயுத மிரட்டல் விடுவதில் ஈடுபட்டு வருகின்றன.
ரஷியாவுக்கு எதிராக பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக முன்னணி நேட்டோ நாடுகளின் உயர் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ரஷியாவைப் பற்றிய இத்தகைய கருத்துக்களை அனுமதிக்கிற நபர்களுக்கு, நமது நாட்டிலும் பல்வேறு அழிவுமுறைகள் இருக்கின்றன.
நமது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு ஆளாகிறபோது, ரஷியாவையும், ரஷிய மக்களையும் பாதுகாக்க நாங்கள் நிச்சயமாக எங்கள் வசமுள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்.
இதை நான் முட்டாள்தனமாக கூறவில்லை” என்றார். இந்த நிலையில், ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் வடகொரியாவிடமிருந்து ரஷியா வாங்கியுள்ளதாக அமெரிக்கா கடந்த சில நாட்களாக கூறி வந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட இரு நாடுகளுமே மறுத்தன.