உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நாட்டில் அணி திரட்டலுக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, தலைநகர் மாஸ்கோவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக உக்ரைனிய படைகள் நடத்தி வரும் தீவிர தாக்குதலால் ரஷ்யா கைப்பற்றிய பல பகுதிகளை இழந்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் போர் தாக்குதலுக்கு கூடுதலாக 3,00,000 துருப்புக்களை சேர்க்க ரஷ்ய ஜனாதிபதி புடின் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியின் இந்த அதிரடி அறிவிப்பால் கடுமையாக அதிருப்தி அடைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை பொலிஸார் கடுமையாக கையாண்ட போதிலும், காவல்துறையின் எதிர்வினைக்கு எதிராக தைரியமாக போர் வேண்டாம் என்று கோஷங்களை எழுப்பினர்.
புதன்கிழமை இரவு நாடு முழுவதும் 38 நகரங்களில் தடுத்து வைக்கப்பட்ட 1,371 க்கும் மேற்பட்டவர்களில் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் குறைந்தது 300 பேர் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.