News

வியட்நாமில் மதுபான பாரில் தீ விபத்து- 32 பேர் பலி

 

வியட்நாமின், ஹோசிமின் நகரில் உள்ள மதுபான பாரில் சுமார் 150 பேர் கூடியிருந்தனர். அப்போது அக்கட்டிடத்தில் 2-வது மாடியில் திடீரென்று தீப்பிடித்தது.

தீ வேகமாக பரவியதால் அங்கிருந்தவர்கள் வெளியே ஓடி வர முயற்சித்தனர். ஆனால் தீ மற்றும் புகைமூட்டத்தில் பலர் சிக்கி கொண்டனர். இதனால் கட்டிடத்தின் பால்கனியில் இருந்து பலர் கீழே குதித்தனர். தகவலறிந்ததும் தீயணைப்பு வீரர்களின் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த தீவிபத்தில் 15 பெண்கள் உள்பட 32 பேர் உயிரிழந்தனர். இதில் 8 பேர் கழிவறையில் பிணமாக கிடந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 12 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top