News

200வது நாள்… உக்ரைனை மொத்தமாக இருளில் மூழ்கடித்த ரஷ்யா: பயங்கரவாதம் என ஜெலென்ஸ்கி

 

உக்ரைன் மீதான படையடுப்பின் 200வது நாளில், ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பகுதியை மீட்டெடுத்த உக்ரைனுக்கு கடும் பதிலடி அளித்துள்ளது ரஷ்யா.

உக்ரைனின் உள்கட்டமைப்பு மீது கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது ரஷ்யா. குறித்த தாக்குதல்களை குறிப்பிட்டு பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, மின் நிலையங்களில் தாக்குதல் முன்னெடுத்திருப்பது பயங்கரவாத செயல் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

இராணுவ முகாம்கள் மீதல்ல, அப்பாவி பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் தைக்க வேண்டும், அதுவே இந்த தாக்குதலின் நோக்கம் என்றார் ஜெலென்ஸ்கி.

உக்ரைன் மொத்தமும் இருளில் மூழ்கியுள்ளதற்கு முக்கிய காரணம் ரஷ்யா என குறிப்பிட்டுள்ள அவர், வெடிகுண்டு தாக்குதலால் மின் நிலையங்கள் பல தீப்பற்றி எரிவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கார்கிவின் மேற்கு புறநகரில் உள்ள ஒரு மின் நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு குறைந்தது ஒருவர் மரணமடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, உக்ரைனின் இராணுவத் தலைவர் ஜெனரல் வலேரி ஜலுஷ்னி தெரிவிக்கையில், தனது படைகள் சுமார் 1,160 சதுர மைல்களை மீண்டும் கைப்பற்றியதாகக் கூறினார்.

மட்டுமின்றி, உக்ரேனிய துருப்புக்கள் இப்போது ரஷ்ய எல்லையில் இருந்து 30 மைல் தொலைவில் இருப்பதாக அவர் கூறினார். ஆனால் இன்றிரவு ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்ந்து முன்னேறும் உக்ரைனின் திறனை சேதப்படுத்த முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் இன்றிரவு மின்சாரம் இல்லாமல் காணப்பட்டுள்ளது. இதனிடையே, Zaporizhzhia அணுமின் நிலையமனது கதிர்வீச்சு அபாயம் காரணமாக மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top