வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘போதைவஸ்து பாவனை மற்றும் திருட்டு சம்பவங்கள் என்பன தற்போது அதிகரித்து காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும். விழிப்புக்குழுக்களை உருவாக்கி செயற்பட வேண்டும்.
பொலிஸ் மற்றும் படையினர் அதிகமாக இருந்தும் போதைப்பொருள் பாவனையை தடுக்க முடியாதுள்ளது. எங்களை சீரழிக்க சிங்கள பேரினவாதம் முயற்சிக்கிறது. இதனை அனைவரும் இணைந்து முறியடிக்க வேண்டும்.
எங்களை சீனா பகடைக்காயாக்க முயற்சிக்க வேண்டாம். குழம்பிய குட்டையில் சீனா மீன்பிடிக்ககூடாது. சீனத் தூதரகத்திடம் பெற்ற உதவி தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரின் கருத்து வேடிக்கையானது என கூறினார்.