News

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் மட்டும் 49,000 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர், அமெரிக்காவின் தெற்கு மாகாணமான வடக்கு கரோலினாவில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

வடக்கு கரோலினாவில் உள்ள ராலே நகரத்தில் நேற்று மாலை 5 மணியளவில் பொதுமக்களை நோக்கி ஒரு மர்மநபர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். பின் அங்கிருந்து அவர் தப்பிவிட்டார். எனினும் போலீசாரின் தீவிர நடவடிகையால், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அப்பகுதியில் கைது செய்யப்பட்டார். பின் அவர் உள்ள ஒரு குடியிருப்பில் அடைக்கப்பட்டார்.

இந்த கொடூர தாக்குதலில் காயமடைந்த ஒரு அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. அங்கு கடந்த ஓராண்டில் மட்டும் மட்டும் 49,000 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர். அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 130க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் உயிரிழந்தனர் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top