விருப்புவாக்கு முறைமையானது மோசடிக்கு காரணம் எனவும், கலப்புத் தேர்தல் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தி தேர்தல் செலவினத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதத்தினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தற்போதுள்ள 8,000 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கையினை 4,000ஆக குறைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.