News

இலக்கியத்திற்கான நோபல் பரிசு: பெண் எழுத்தாளருக்கு அறிவிப்பு…!

 

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ நாட்டை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 2022-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அனி எர்னாக்ஸ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எல் அகுபேஷன் (L’occupation) என்ற புத்தகத்தை எழுதியதற்காக எழுத்தாளர் அனி எர்னாக்ஸ்-க்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டுக்கான இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top