இலங்கையில் பொதுக் கூட்டங்களைத் தடைசெய்யும் வகையில் உயர் பாதுகாப்புப் பிரதேசங்கள் பிரகடனம் செய்யப்படுவது தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரத்துக்கான சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரத்துக்கான சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ட் நியாலெட்சோசி வால்வ் ருவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான மக்களின் உரிமைகளை இலங்கை அரச அதிகாரிகள் மதிக்க வேண்டும் மற்றும் எந்தவொரு கட்டுப்பாடுகளும் நியாயமானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.