News

இலங்கை மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா வழங்கியுள்ள உறுதி

இலங்கையில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா மீண்டும் வலியுறுத்துகின்றது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக் சோனெக் அண்மையில் வட மாகாணத்திற்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டார்.

சோனெக், தமது பயணத்தின்போது, தமிழ் மற்றும் முஸ்லிம் சிவில் சமூகத் தலைவர்களை சந்தித்ததாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் குறித்தும், அவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர்.

அத்துடன் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவது பற்றிய கருத்துகளையும் யோசனைகளையும் அவர்கள் பரிமாறிக் கொண்டதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top