News

எதிரிகளை துடைத்தெறியும் அணு ஆயுத போர் படை தயார் – வடகொரியா

எதிர்களை துடைத்தெறியும் அணு ஆயுத வல்லமைகொண்ட போர் படை தயாராக உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.

குறிப்பாக, தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இதனிடையே, அணு ஆயுத வல்லமை பெற்ற அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் கடந்த 23-ம் தேதி தென் கொரியாவுக்கு வந்தது. ராணுவ பயிற்சிக்காக அமெரிக்க போர் கப்பல் தென் கொரியா வந்துள்ளது

. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அதிலும், ஒரு ஏவுகணை ஜப்பான் வான்பரப்பை தாண்டி பசுபிக் கடலில் விழுந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வடகொரியாவின் சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. இதனால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 7 முறை ஏவி பரிசோதனை நடத்தப்பட்ட அணு ஆயுத பயிற்சி உண்மையான போர் திறன், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் எங்கு (அமெரிக்கா, தென்கொரியா), எந்த நேரத்தில் நிறுவப்பட்டிருந்தாலும் இருந்தாலும் அதை தாக்கி அழித்து துடைத்தெறியும் அணு ஆயுத வல்லமைகொண்ட அணு ஆயுத படைப்பிரிவு தயாராக உள்ளது என வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பகுதியில் ஏவப்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணை, தென்கொரிய விமானப்படை தளத்தை அழிக்க நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து சென்று ஏவுகணை, ஜப்பான் வான்பரப்பு மேல் பறந்து சென்ற நிலத்தில் இருந்து ஏவப்பட்டு நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை ஏவுதலை அதிபர் கிம் பார்வையிட்டார் என வடகொரியா தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top