ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2024 இல் இலங்கை வரலாற்றில் பெரும் திருப்பம் ஏற்படும் என பிரான்ஸில் இருக்கும் மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குநரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
13 மேலதிக வாக்குகளால் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் 2024 இல் இலங்கை வரலாற்றில் பெரும் திருப்பம் ஏற்படும் எனவும்,57 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.