கனடாவில் சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சிறுவர் நல மருத்துவ மனைகளில் கூடுதல் எண்ணிக்கையில் வைரஸ் தொற்றினால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.எஸ் வைரஸ் (respiratory syncytial virus) எனப்படும் வைரஸ் தொற்றினால் இவ்வாறு சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த வைரஸ் தொற்று சளிக்காய்ச்சல், இருமல், தும்மல் போன்ற நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
சில சந்தர்ப்பங்களில் இந்த வைரஸ் தொற்றினால் நியூமோனியா காய்யச்சல் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆறு வயதுக்கும் குறைந்த சிசுக்கள் மற்றும் இருதய நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இந்த கூடுதல் பாதிப்பு ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் கனடாவில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்