மனித உரிமை மீறல்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை 42 நாடுகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதுடன் அந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மொத்த நாடுகளின் எண்ணிக்கை 193 ஆகும். மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகளைக் கணக்கிட்டு ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கை இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்தற்காக இந்த செயற்பாட்டாளர்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டில் பல குழப்பமான போக்குகளை எடுத்துக்காட்டியுள்ள, ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் செய்தியாளர்கள் எவ்வாறு பழிவாங்கல் மற்றும் அரசு மற்றும் அரச சார்பற்ற நபர்களின் மிரட்டல்களுக்கு ஆளானார்கள் என்பதை விபரிக்கிறது.
இவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட சட்டத்தால் இலக்கு வைக்கப்பட்டனர் மற்றும் ஒன்லைனிலும், ஒஃப்லைனிலும் கண்காணிக்கப்பட்டனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பில் பல பழிவாங்கும் வழக்குகள் கூட பதிவாகவில்லை என் மனித உரிமைகளுக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகளுக்கான உதவிச் செயலாளர் நாயகம் இல்சே பிராண்ட்ஸ் கெஹ்ரிஸ் கூறியுள்ளார்.
மே 1, 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 42 மாநிலங்களில் ஆப்கானிஸ்தான், அன்டோரா, பஹ்ரைன், பங்களாதேஷ், பெலாரஸ், பிரேசில், புருண்டி, கேமரூன், சீனா, கியூபா, சைப்ரஸ், ஜனநாயகக் குடியரசு, கொங்கோ, ஜிபூட்டி, எகிப்து, குவாத்தமாலா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், கஜகஸ்தான், லாவோஸ், லிபியா, மாலைத்தீவு, மாலி, மெக்ஸிகோ, மொராக்கோ, மியான்மர், நிகரகுவா, பிலிப்பைன்ஸ், ரஷ்ய கூட்டமைப்பு, ருவாண்டா, சவுதி அரேபியா, தெற்கு சூடான்,இலங்கை, சூடான், பாலஸ்தீனம், தாய்லாந்து, துர்க்மெனிஸ்தான், ஐக்கிய அரபு ராச்சியம்;, வெனிசுலா, வியட்நாம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.