News

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுடன் சந்திப்பு – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மட்டக்களப்புக்கு பயணம்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்கவுள்ளனர்.

இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த கால ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உறவினர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் மூலம் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பிள் நோக்கமென அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வடமாகாணத்தில் காணாமல் போனவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், விரைவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top