கனடாவின் குயின் எலிசபத் அதிவேக நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருந்த வாகனமொன்றின் சில்லு திடீரென கழன்று வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பிக்கப் ரக வாகனமொன்றில் பயணம் செய்த 77 வயதான நபர் ஒருவர் வாகன சில்லு வாகனத்தில் மோதியதனால் விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
மிஸ்ஸிசாகுவா மற்றும் ஓக்வெலி எல்லைப் பகுதியின் வின்ஸ்டன் சேர்ச்சில் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தின் டயார் கழன்று வீழ்ந்ததனை வாகனம் செலுத்தி வந்த ட்ரக் சாரத முதலில் அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்த்திசையில் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்திலிருந்து டயர் கழன்று, பிக்கப் வாகனத்தில் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் வீதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு உறுதி செய்துள்ளது.