ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் உண்மையில் நடந்தது இலங்கைக்கு ஆதரவாக 27 நாடுகள் செயற்பட்டமையே என ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக 20 நாடுகள் வாக்களித்த போதிலும் 27 நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சீனா, பாகிஸ்தான், பொலிவியா, கியூபா, எரித்திரியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன
கத்தார் உட்பட 20 நாடுகள் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சரும் அதிபர் சட்டத்தரணியுமான அலி சப்ரி, இலங்கையினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரேரணைகளை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்தார்.
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 30 வாக்குகள் கிடைக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 நாடுகளே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.