News

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உறுதியளித்த ரணில்..! 

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற அதிபர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச ஆகியோருக்கு தமிழ் மக்கள் சார்பில் தனது நன்றியை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” சில மாதங்களுக்கு முன்னர், எதிர்கால அதிபர் பற்றிய கேள்விகள் நாட்டில் தோன்றிய போது, பலரும் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்களே நாட்டை வழிநடத்தப் பொருத்தமானவர் என்பதை நாம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தோம்.

அத்துடன் அவரை நாட்டின் அதிபராக மாற்றுவதற்காக வெளிப்படையாக பல்வேறு செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தோம். அன்றைய நாட்களில் எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க, அவற்றுள் ஒன்றான அரசியல் கைதிகள் தொடர்பாகவும் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை தற்போது கட்டம் கட்டமாக நிறைவேற்றி வருகின்ற அதிபர், தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பான ஏனைய விடயங்களிலும் ஆரோக்கியமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top