2006 கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பொறியியலாளர் சிவலிங்கம் ஆரூரனுக்கு அரச இலக்கிய விருது கிடைத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது.
சிறையில் இருந்தவாறே, சிவலிங்கம் ஆருரன் 8 புத்தகங்களை எழுதியுள்ள நிலையில் அதில் ஆதுரசாலை என்ற தமிழ் நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.