இவ்வெள்ளத்தினால் 13 லட்சம் பேர் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் நைஜீரியவரின் மனிதாபினமான விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மனிதாபிமான விவகார அமைச்சர் இது தொடர்பாக கூறுகையில், இவ்வெள்ளத்தினால் 16 ஆம் திகதி வரை 603 பேர் உயிரிழந்துள்ளனர்.
82,000 இற்கும் அதிகமான வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. சுமார் 110,000 ஹெக்டேயர் விவசாய நிலங்கள் அழந்துள்ளன என தெரிவித்துள்ளார்.
ஜைநீரியாவின் 36 மாநிலங்களில் 27 மாநிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
நைஜீரியாவில் கடந்த 10 வருடங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்ட மோசமான அழிவு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.