பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவர் புலம்பெயர்ந்தோர் மையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டோவர் துறைமுகத்தில் உள்ள புதிய பிரித்தானிய குடிவரவு எல்லைப்படை மையத்தின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
டோவர் துறைமுகத்தில் உள்ள புலம்பெயர்ந்தோர் மையம் மீது பெட்ரோல் குண்டுகளுடன் பட்டாசுகளை இணைத்து வீசிவிட்டு, பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மூன்று பெட்ரோல் குண்டுகளில் ஒன்று வெடிக்கவில்லை என்றும், சந்தேகநபர் தாக்குதலுக்குப் பிறகு, அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு தனது காரை ஓட்டிச்சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் உள்ளூர் பொலிஸார் மற்றும் உள்துறை அதிகாரிகள் தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என கூறப்படுகின்றது.
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் தீப்பரவல் ஏற்பட்டமையினால் சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.