மக்கள் ஆணையைப் பெற்றே அரசியலமைப்பு தொடர்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் – மனோ
மக்கள் ஆணையைப் பெற்றே தேர்தல் முறைமை உள்ளிட்ட அரசியலமைப்பு தொடர்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை குறைத்தல் உள்ளிட்ட தேர்தல் சட்டச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள மனோ கணேசன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாகவே கருதப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எனவே, தேர்தல் ஒன்றை நடத்தி புதிதாக அமையும் அரசாங்கமே அந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.