முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் குழுவிற்குமிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பார் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பசில் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், அமைச்சரவையில் அவ்வாறான கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.