ரஷியாவிற்கு ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்துங்கள் என்று ஈரானுக்கு உக்ரைன் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனில் ஈரானிடம் இருந்து பெறப்பட்ட வெடிகுண்டு டிரோன்களை பயன்படுத்தி ரஷியா தாக்குதல்களை நடத்தி வருவதாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் ஈரான் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோல்லாஹியனுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துமாறு வலியுறுத்தியதாகவும் உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.