ரஷ்ய படைகள் பின்வாங்கல் : லைமானில் மீண்டும் கொடியை நாட்டியது உக்ரைன்
கிழக்கு உக்ரேனிய நகரமான லைமான், உக்ரேனியப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளன.
நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி விளாடிமிர் புடின் நான்கு உக்ரேனிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவித்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இருப்பினும் ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புகள் அப்பகுதியை முதலில் சுற்றி வளைத்ததாகவும் தற்போதும் அங்கு தமது படைகள் இருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லைமானில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து ரஷ்ய துருப்புக்களும் கைது அல்லது கொல்லப்பட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
எவ்வாறாயினும் நகரத்தில் உக்ரேனியக் கொடி பறந்து கொண்டிருந்தாலும், அங்கு இன்னும் சண்டை நடந்து கொண்டிருபதக்க உக்ரேனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.