கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
வீடு ஒன்றில் இருந்து நபர் ஒருவர் பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
சம்பவம் ஒன்றே தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் டொரன்டோ போலீசார் எக்லின்டன் மற்றும் கென்னடி வீதிகளுக்கு அருகாமையில் இருந்த வீடு ஒன்றிற்கு சென்றுள்ளனர்.
இவ்வாறு அந்த வீட்டிற்கு சென்றபோது பொலிசார் மீது வீட்டினுள் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் வேறு எவரும் இருக்கின்றார்களா என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த துப்பாக்கிச் சூட்டை சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஸென்லி வீதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தல் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கனடாவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்